வெள்ளி, 28 நவம்பர், 2008

எது ஆன்மிகம் ?

ஒரு பெண் என்னதான் நான்கு வேதங்களையும் கரைத்துக் குடித்தாலும் அவளால் மடாதிபதியாக அல்ல, நம் தெருமுனைக் கோயில் பூசாரியாகக் கூட ஆகமுடியாது. 

குரானை தலைகீழாக தெரிந்துவைத்திருந்தாலும் ஒரு முஸ்லீம பெண், மதபோதககராக முடியாது. 

பைபிள் படித்தே வாழ்க்கையை களித்தாலும் ஒரு பெண்ணால் போப்பாண்டவர் ஆகமுடியாது.. கோட்பாடுகளைவிட பாகுபாடுகள் அதிகம் கொண்டன மதம். அனைவருக்குமான ஆன்மிக தேடல் மதத்தின் வழி சாத்தியமா ?

சடங்குகளும், வழிபாடுகளும், போற்றுதலும் மதத்தின் பண்புகள். இந்த ஆகமங்களையும், சடங்குகளையும் தெரிந்து கொள்வது ஆன்மிகமா ?

அய்யனார்- The Village God. | Vanila Balaji | Flickr

பெருமாள் போல் பெரிய தெய்வங்கள் கோவில்களில் வசதியாக உள்ளிருக்க, அய்யனார், கருப்பசாமி, கருப்பணசாமி எல்லாம் ஊருக்கு வெளியில் மொட்டை வெயிலில் நிற்கிறார்கள்.  இதில் எந்த தெய்வத்தை வணங்குவது ஆன்மிக தேடலாக இருக்கும் ?

இல்லை "வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேனே" என்று வள்ளலார் மனமிறங்கும் மனிதநேயம் தான் ஆன்மிகமா ?


புதன், 2 ஜூலை, 2008

திரெளபதியின் கேள்வி


"கண்ணா ..நீ கடவுள்.. முதலிலேயே என்னை நீ காத்திருக்கலாம் அல்லவா ? சேலை களையும் வரை ஏன் காத்திருந்தாய் ?" என்றாள். கண்ணன் "முதலில் நீ நியாயம் கேட்டு வார்த்தையால் போராடினாய்.. பின் உன் கணவனை காப்பாற்ற அழைத்தாய்.. பின் உன் கைகளால் சேலையை பற்றி போராடினாய்.. பின் பற்களால் அவற்றை கவ்விப்பிடித்துப் பார்த்தாய்.. முடிவிலேயே முழுவதுமாக உன்னை நம்பாமல் என்னை மட்டும் நம்பி கண்ணா என்ற அழைத்தாய்.. நான் அப்போது வந்து காத்தேன்" என்கிறார். இது சரணாகதி தத்துவம். கீதை எங்கும் நிறைந்து காணப்படுவது சரணாகதி தான்.

https://new-img.patrika.com/upload/2020/04/22/mahabharat_draupadi-2_6025835_835x547-m.jpg

 

"பாஞ்சாலி சபையினிலே 

பாரதி இருந்திருந்தால் 

கண்ணன் வரும்வரையா காத்திருப்பான். 

தன் தலைப்பாகை தந்து தன்மானம் காத்திருப்பான்.." 

என்பது புதுக்கவிதை.! 

 


திங்கள், 30 ஜூன், 2008

தமிழ் நெறி அறிமுகம்



தமிழனின் மதம் யாது ? அவனுக்கென்று ஒரு மதம் உண்டா ?

100 ஆண்டு கட்டிடங்கள் எல்லாம் வரலாற்று சின்னங்கள் ஆன இன்றைய உலகில்,ஆயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை மண்டபத்திற்கு நம்மூரில் பெயர் 'புதுமண்டபம்'.
பிற தேசங்களில் மனித இனம் காட்டில் வேட்டையாடி விலங்காய் வாழ்ந்த காலத்திலேயே கல்லணையும் கப்பலும் கட்டினோம்.அலக்சாண்டர் முதல் அவுரங்கசிப் வரை படையெடுத்து இந்தியக் கோயில்களை புடைத்தெடுத்த காலத்தில், வான்முட்ட கற்கோயில்கள் கட்டினோம்.
இன்றுள்ள பல மொழிகளின் எழுத்து வடிவம் பிறப்பதற்கு முன்பே, அல்லது மொழிகளே பிறப்பதற்கு முன்பே இலக்கணமும், இலக்கியமும் படைத்தோம்.

இவ்வளவும் செய்த நாம் மதம் மட்டுமா இறக்குமதி செய்தோம் ? மற்றவை போல மதத்திலும் (சமணம், பெளத்தம், சைவம், வைணவம் என) வந்தாரை வாழவைத்தோம் ..!!

தெய்வம் ஒன்றே என்றும், அது அன்பே என்றும், அந்த தெய்வத்தை அன்பாய் தொழுவது எவ்வாறு என்றும் உலகிற்கே ஒளி தரும் வண்ணம் ஒரு அறிய மதம் தமிழனிடம் இருந்தது. அந்த மதநெறியைப் பற்றியே எனது சிறிய தேடல் இந்த தொடர்.

இந்த மதத்திற்கும் ஒரு வேத நூல் உண்டு. அது தெய்வம் தந்த திருக்குறள்.

கல்வி, மருத்துவம், காதல், அரசியல், சுயமுன்னேற்றம், மேலான்மை, தன்னம்பிக்கை என எல்லாவற்றையும் கண்ட குறளே தமிழனின் வேதநூல். கடவுள் மதம் பற்றி வள்ளுவனின் பார்வையிலிருந்து இந்த பயணத்தை தொடங்குவோம்.